03 April 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 92






கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய 
கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும்.  இவைதான் நம்முடைய தருமம்.  நாம் செய்யும் காரியங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன் 
அளிப்பவையாக இருந்தால் அது தருமம் எனப்படும்.  மறைந்தபின் உய்வு பெற தரும வழிகளிலான கடமைகளைச் செய்ய வேண்டும்.  
மற்றவர்களின் நலனுக்காக் நாம் இன்ஸ்யூரன்ஸ் சேய்வதைவிட இது முக்கியமானது.  தரும காரியங்கள் அவைகளைச் செய்பவரின் 
மறுமை நலனுக்கு இன்ஸ்யூரன்ஸ் போலாகும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 91





ஒரு பிரயாணி ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் குதிரை வண்டிக்காரர்களும், ஆட்டோ ஓட்டுபவர்களும், டாக்ஸிக்காரர்களும் அவனை சூழ்ந்து கொள்கிறார்கள்.  அவன் தனக்கு எது வேண்டுமோ அதில் ஏறிக்கொண்டு தன்னுடைய இடத்தை அடைகிறான்.  வெவ்வேறு விதமான 
வண்டிக்காரர்கள் சவாரிக்காக போட்டியிடுவதை ஒரு குற்றமாக கருத முடியாது.  அது அவர்களுடைய ஜீவனம்.  ஆனால், வெவ்வேறு மதங்களைக் கைப்டிப்பவர்கள் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரைத் தங்கள் மதத்தின் மூலமே உய்விக்க முடியுமென்று முயற்சிப்பது அர்த்தமற்றது.  

18 February 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 90




தற்கால வசதியான வாழ்க்கையை வேண்டுகிறோம்.  அதற்குப் பணம் தேவைப்படுகிறது.  நாம் எல்லோருமே செல்வந்தராகி விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் நிம் மதியாகவும், பயமின்றியும் வாழ அது உதவுமா ?  ஒருவருக்கு எவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும், மற்றவரைவிட
அதிகம் வேண்டுமென்று விரும்புவதால், போட்டியும், சச்சரவும் உண்டாகின்றன.  மற்றவரைவிட அதிகம் பெறவிரும்புவது மனித இயல்பு.  ஒரு வஸ்து எல்லோருக்கும் ஒரு இடத்தில் வழங்கப்பட்டாலும் அதை முந்திப் பெறுவதற்கு போட்டி ஏற்படுகிறது.  இத்தகைய போட்டி மனப்பான்மை
நிலவும் வரை மனதில் திருப்தி எப்படி ஏற்படும் ?  பொருளாதார ரீதியிலான நன்மைகள் மட்டும் போட்டியைக் குறைத்துவிடாது.  போட்டி மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க நம்மைத் தவிர நாம் அடையக்கூடிய மற்றொரு வஸ்து இல்லை என்ற ஞானத்தைப் பெறவேண்டும்.  அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 89



கல்வித்துறையிலும், சமூக வாழ்க்கையிலும் உள்ள நடைமுறைப் போக்கு எதிர்கால சந்ததியில் வரும் குழந்தைகள் நம்முடைய மத மரபுகளை மனதில் கொள்வார்களா என்று அச்சமளிக்கிறது.  ஒரு குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையைப் போட்டு விட்டால், அது என்றாவது ஒரு நாள் நிச்சயம் முளைத்து விடும்.  அவர்கள் கல்வி பயிலும் காலத்தில் பக்தி நூல்களை அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிட்டால் பக்தி என்ற விதை அவர்களுடைய மனதில் ஆழப்பதிந்துவிடும்.  
Related Posts with Thumbnails