25 March 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 44



நமக்கு சம்பந்தப்பட்டவைகளையும் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், நாம் மகிழ்ச்சியாலோ, துக்கத்தினாலோ பாதிக்கப்படாமல் மனதில் சம நிலையை அடைய முடியும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 75




ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையப் பொறுத்ததல்ல. இந்து மத கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசாரகனாகிறான்.  


அப்படிப் பட்டவர்களால்தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 74


இந்து மதத்தில் தோன்றிய மஹான் கள் தங்களுடைய உபதேசங்களால் மக்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதாகவோ அல்லது அவர்களை உய்விப்பதாகவோ சொல்லிக் கொள்ளவில்லை.


அவர்களுடைய பரிசுத்தமும், கொள்கைகளும் அதன்படி அவர்கள் நடத்திய வாழ்க்கையும் அவரைஅண்டியவர்களுக்கு ஆன்மீகக் கல்வியாக அமைந்தது.  தான் பரிசுத்தமாக இல்லாத ஒருவர் ம்ற்றவர்கள் அவ்வாறு இருக்க வேண்டுமென்று உபதேசம் செய்ய முடியாது.  

24 March 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 73


வேதங்கள் நம்முடைய மதத்தின் வேர்கள்.  பண்டிகைகளும், விருந்துகளும், மற்றவைகளும் அம்மரத்தின் பூக்களும், கனிகளும் போல, அவைகளுக்கும் வேதம் என்ற வேர் தேவைப்படுகிறது.  மண்ணில் புதைத்திருந்தாலும் அந்த வேர்கள் மரத்தின் பூக்களையும் கனிகளையும் போல மணத்துடனும் எப்போதும் 
புதுமையாகவும் இருக்கின்றன.  வேத அத்யயனமும் வெதத்தை தினசரி சாஸ்திர சடங்குகளில் உபயோகப் படுத்துவதும் நமக்கு மிக முக்கியம்.  இதற்கு வேதங்களை மனப்பாடம் விதிப்படி ஓதவேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 72


கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் இளைஞர்களும், பெண்களும் அது பற்றி அசட்டையாக இருக்கின்றனர்.  மந்திரங்களின் அர்த்தங்களை விஷயம் தெரிந்த ஒருவர் கல்யாணத்திற்கு முன்பே விளக்கிச் சொல்லிவிட்டால், மணமக்கள் புரிந்து கொண்டு அக்கறையுடன் சடங்குகளைச் செய்வார்கள்.  இதே முறையை உபநயனம் மற்றும் இதர ஸம்ஸ்காரங்களுக்கும் கையாளலாம்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 71


ஒரு நாள் ஒரு பாலத்தின் ஒரு வளைவின் கீழ் நின்று மற்ற வளைவுகளைப் பார்த்தால் அவை தான் நின்று கொண்டிருக்குமிடத்திலுள்ள வளைவைவிட சிறிய வைகளாக தெரியும்.  ஆனால் பாலத்தின் எல்லா வளைவுகளும் ஒரே அளவானவை என்று நமக்குத் தெரியும்.  


அதுபோல் ஒரு தேவதையிடம் பக்தி கொண்ட ஒருவனுக்கு மற்ற தேவதைகள் கீழானவைபோல் தோன்றும்.  வினாடியும் தன்னுடைய தேவதையிடம் தான் கொண்ட அபிமானத்தால் அவ்வுணர்ச்சி ஏற்படுகிறது.  ஆனால் எல்லா தெய்வங்களுமே கடவுளின் விதவிதமான தோற்றங்களே.


Related Posts with Thumbnails