தெய்வீகப் பொன்மொழிகள் - 45
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் பெரிய புண்யகாலம் என்று நினைப்பது வழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஸ்ரீ ச்ங்கர அவதாரத்திற்கு முன், வைதீக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போய்விட்டால் அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்?
அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களையும் கொண்டாடுவோமா என்பது சந்தேகம்.
No comments:
Post a Comment