தெய்வீகப் பொன்மொழிகள் - 43
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமாக்களை பாடி பஜனை செய்யவேண்டும். இதில் சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் அல்லது பூஜைக்கென்று தனி அறை இல்லாவிட்டால் - ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும்.
பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை. பக்தி, பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் ஓடிக்கொண்டிருக்கிற குழந்தை, அம்மாவின் நினைப்பு வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா?
அதில் வெட்கமோ, ச்ங்கீத அழகோ இல்லை.
No comments:
Post a Comment