தெய்வீகப் பொன்மொழிகள் - 47
உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல காலங்களாக உருவெடுத்திருக்கிறது. உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதமாக உருவெடுக்கின்றன. சிஷ்ய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக, இப்படிப் பல உருவங்களாக உயர்ந்து வெளிப்படுகிறது. இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுத்துக்கொள்கிற உருவமே எல்லா உயிர்களிடமும் அன்பு, உலகம் முழுவதும் ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே, மிகப் பெரிய பண்பாடு.
No comments:
Post a Comment