" ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போன போது, ஒரு மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப் பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்? " என்று கேலி செய்தவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மனித வேழத்தில் இருந்தான்; மனிதர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை இவர்கள் மறந்து பேசுகிறார்கள். இராமாயண நாடகம் இருக்கிறது. வால்மீகி, லவகுசர்களை இராமனிடம் அழைத்துக் கொண்டு போகும் கட்டம்.
இராமஸ்வாமி அய்யங்கார் ராமர் வேஷத்தில் நடிக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே லவகுசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து " இந்தக் குழந்தைகள் யார் ? " என்று கேட்கிறார். இராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம் பிள்ளைகளையே தெரியவில்லையா என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா. அல்லது நாடக வால்மீகி " இவர்கள் இராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள் ! நீங்கள்தானே அந்த இராமஸ்வாமி அய்யங்கார் ? " என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும் ?
No comments:
Post a Comment