ஒரு நாள் ஒரு பாலத்தின் ஒரு வளைவின் கீழ் நின்று மற்ற வளைவுகளைப் பார்த்தால் அவை தான் நின்று கொண்டிருக்குமிடத்திலுள்ள வளைவைவிட சிறிய வைகளாக தெரியும். ஆனால் பாலத்தின் எல்லா வளைவுகளும் ஒரே அளவானவை என்று நமக்குத் தெரியும்.
அதுபோல் ஒரு தேவதையிடம் பக்தி கொண்ட ஒருவனுக்கு மற்ற தேவதைகள் கீழானவைபோல் தோன்றும். வினாடியும் தன்னுடைய தேவதையிடம் தான் கொண்ட அபிமானத்தால் அவ்வுணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் எல்லா தெய்வங்களுமே கடவுளின் விதவிதமான தோற்றங்களே.
No comments:
Post a Comment