தெய்வீகப் பொன்மொழிகள் - 41
ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியை தீர்ப்பது மட்டும் போதாது. நோயாளிகளது மனதில் கெட்ட எண்ண ங்கள் என்ற வியாதி
இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். இவ்வாறேதான் பள்ளிக்கூடங்கள் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம்.
படித்து வெளியில் வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?
பக்தி, கட்டுப்பாடு, தியாகம் இவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாமர்த்தியமாக தவறுகள் செய்து தப்பித்துக் கொள்வதற்கு வழியாகிறது. அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் போலவே, இவைகளை விடவும் அவசியம் இருக்கத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment