24 December 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 88


                       காஞ்சி மஹான்

நம்முடைய சந்தேகங்களுக்கு வேத சாஸ்திரங்களிலிருந்து விளக்கம் கிடைக்கவில்லை எனில், சாஸ்திரம் அறிந்து அதன்படி நடக்கும் பெரியோர்களின் வழியை நாமும் பின்பற்றவேண்டும்.  அத்தகைய வழிகாட்டுதல் கிடைக்காவிடில் ஆசையையும், அகங்காரத்தையும் வென்று தூய உள்ளம் கொண்ட நல்லவர்கள் வழியில் நாம் செல்ல வேண்டும்.  இதுவும் இல்லையெனில், நாம் நம்முடைய மனசாட்சியின்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.   

தெய்வீகப் பொன்மொழிகள் - 87




மஹா பெரியவா


கெட்ட எண்ணங்களாலும், தகாத ஆசைகளாலும் கோபம் போன்ற தீவிர உணர்ச்சிகளாலும் நாம் விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும் நம் மனம் அசுத்தமடைகிறது.  நம் மனதை தினமும் சுத்தப்படுத்த வேண்டியது நம் கடமை.  இதனால் மன அழுக்குகள் மேன்மேலும் சேராமலிருக்கும்.  சித்த மலத்தைக் கழுவ வல்ல ஒரே நீர் தியானம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 86

               நடமாடும் தெய்வம்
சமநிலையில் உள்ளவர்களுக்கிடையே காணும் அன்புதான்.  நட்பு, கடவுளிடமும், மேல் மட்டத்தில் உள்ளவர்களிடமும் காட்டும் அன்பு.  பக்தி நமக்குக் கீழ்ப்பட்டவரிடம் காட்டும் அன்பு க்ருபை எனப்படும்.  எல்லோரிடமும் அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கை என்னும் உயர்ந்த கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும்.  தர்மமே நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

01 December 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 85



நம்முடைய மனநோய்களைத் தீர்ப்பதற்கு நமக்கு கடவுளின் அருள் வேண்டும்.  நம்முடைய மனதிலிருந்து கோபம், வெறுப்பு, பேராசை, காமவெறி இவைகளை விரட்ட வேண்டுமானால் மனதை அன்பால் நிரப்ப வேண்டும்.  ஒவ்வோருவர் உள்ளத்திலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார்.  நம்முடைய சுயநலத்தினாலும் மற்ற ஆசாபாசங்களாலும் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்.  அன்பு வழியாக அவைகளை அகற்றி மனதை அன்பினால் நிரப்பினால் அது கடவுள் குடி கொள்வதற்குத் தகுதியாக தூய்மை பெறும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 84




கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும்.  நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம்.  அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால், மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும்.  மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 83





உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவதுபோல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை பலம் பெறச் செய்கிறது.  இதனால் சித்தம் சுத்திபெற்று, நம்முன் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது.  நடத்தையாலும் ஆசார அநுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 82


வரதக்ஷணை நிகழ்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, எதிர்காலத்தில் நம்முடைய சமூகம் வீழ்ச்சியடைய வழிகோலுகிறது.  நம்முடைய சமூகத்தின் மீதும், கலாசாரம், தர்மங்களின் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்கள் வரதக்ஷணை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகங்கள் செய்து, கஷ்டங்களை அனுபவித்த நாம், நம்முடைய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக வரதக்ஷணையை தியாகம் செய்ய முடியாதா? 
Related Posts with Thumbnails