15 February 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 70





நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தருமம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடைபெற வேண்டியிருக்கிறது.  நம்முடைய தருமம் எது?  அதற்கு மூலம் எது? 


 தருமம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம்.  த்ரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும்.  வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 69



பண்பாடுடைய ஒருவன் உலகத்துக்கே உறவினனாகிறான்.  அவன் எல்லோருக்கும் நண்பன்.  ஒருவருக்கும் எதிரி அல்ல.  அவனுக்கு மூவுலகம் தாய் நாடாகும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 68





தன்னலமற்ற சேவை உணர்வு, தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்பது, கடவுளிடம் பக்தி, எல்லோரிடமும் அன்பு, நல்லெண்ணம் இவைகள் மேன்மையடைந்த மனதில் தோன்றுபவை,  இதற்குப் பண்பாடு என்று பெயர்.  சங்கீதம், சித்திரக்கலை போன்றவை அப்பண்பாட்டின் வெளித்தோற்றங்கள்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 67




நம்முடைய கர்மாக்களை கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 66


மௌனம் என்பது கடவுளை வணங்குவதற்கு ஒரு முக்கியமான முறை.  மௌனம் என்றால் பேசாமலிருப்பது மைடுமல்ல.  மனதை எண்ணமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஒரு செயல்முறை.  எலலாப்
புலன்களையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த ஒரு அங்கமும் தானாகவேகூட அசையாமல் இருக்கவேண்டும்.  அத்தகைய மௌனம் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் தெய்வீகமான பொறி இயங்கி பரமாத்மாவை நாம் அனுபவிக்க உதவும்.


பலவிதமான வழிபாட்டு முறைகளிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம் என்னவென்றால், நம்முடைய க்ஷேமத்தின் பொறுப்பைக் கடவுளிடம் விட்டுவிட்டு நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும்.  இது
செயலின்மைக்கோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதற்கோ ஆன தத்துவம் அல்ல.  நம்முடைய பணிகளை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து செயல் படுத்துவதற்கான தத்துவம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 65



நவீன விஞ்ஞான கருத்துக்கள் ஸ்ரீசங்கரரின் எல்லாமே இரு நிலையற்ற ஒன்றேதான் என்ற தத்துவத்திற்கு நெருங்கி வருகின்றன.  இத்தகைய நவீன கருத்துக்கள் உலகில் சமாதானத்தைப் பற்றிய உணர்வு ஏற்பட வழிகோலும் உள்ளது ஒன்றுதான் என்ற தத்துவம் நன்றாக உணரப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் ரூபங்கள் என்று அறிந்துவிட்டால் வித்தியாச மனப்பான்மை மறைந்துவிடும்.

ஒரு எதிரி நாடானாலும், அதிலுள்ள மக்களும் நாமும் ஒன்றே என்ற உணர்வு ஏற்படும்.  அவர்களுக்கு நேரும் துன்பம் தங்களுடையதே என்ற எண்ணம் எழுந்து உலக சமாதானத்தை நிலைநிறுத்த அஸ்திவாரம் போலாகும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 64

ஜகத்குரு

சமீபகாலம் வரை, ஜடப்பொருள் வெவ்வேறு குணங்களுடைய மூலப்பொருள்களால் ஆனவை என்று கருத்தைக் கொண்டிருந்தனர்.  இப்போது, தனிப்பட்ட மூலப்பொருள்களுக்கிடையே வித்தியாசமில்லை
என்றும் எல்லாம் ஒரு சக்தியிலிருந்து உண்டானவை என்றும் சொல்கிறார்கள்.  


ஆகவே, நவீன விஞ்ஞானிகள் வித்தியாசம் என்ற கருத்திலிருந்து எல்லாமே ஒன்று என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.  குறிப்பாக, ஐன்ஸ்டீன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ், எடிங்டன் முதலானோர், ஸ்ரீ சங்கர பகவத்
பாதர்களின் அத்வைத சித்தாந்தத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள்.  நாம் காணும் பிரபஞ்சம் முழு உண்மையல்ல.  ஒரு தோற்றமே என்று கூறி இரண்டாகவும் பலவாகவும் தோன்றும் வித்தியாசங்களை
மறுக்கிறார்கள்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 63



நடமாடும் தெய்வம்
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளபோது காலத்திலோ, தூரத்திலோ நம்மிடமிருந்து பிரிந்திருப்பவர்களின் கவலைகள் நம்மை பாதிப்பதில்லை.  நம்முடைய சென்ற கால துக்கங்களும் பின்நோக்கில் அவ்வளவு கடுமையாகத் தெரிவதில்லை.  நம்முடைய விழிப்பு நிலையிலும், நம்முடைய கவலைகளும், துக்கங்களும் நம்மை பாதிக்காமலிருக்க பழகிக்கொள்ள வேண்டும்.  இன்பமோ, துன்பமோ நம்மை பாதிக்காமல் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டுமென்பதே உபநிஷத்துகள் கற்பிக்கும் பாடமாகும்.  தவத்தின் மூலமே இத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
Related Posts with Thumbnails