25 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 28




தேக பலம், அகிம்சை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்த கஷ்டங்களைப் பாரட்டாமல் பிறரைக் காக்கும் மனப்பான்மையும் சேர்ந்தால் அது மிகப்பெரிய சீலமாகும். இதற்காக "க்ஷத்ர தர்மம்" என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது. பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம். இப்போது நம் நாட்டு இளைஞர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்வது மிக அவசியமாகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 27




பண விஷயத்தில் மட்டுமல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் போதுகூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது. அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வளவளவென்று பேசாமல் சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். திருவள்ளுவரும், எதைக் காக்காவிட்டாலும் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும், என்கிறார்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 26




இப்போது யாருக்குமே நிறைவு இல்லை. சமூக வாழ்கையிலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும் ! எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் விரோதம் ஏற்படுகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 25




மக்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள அவசியமானவை எவையோ அவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இவற்றை அரசாங்கமே எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்குத்தான் திட்டம், ஒழுங்கு எல்லாம் வேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 24




பொழுதுபோக்கு என்று ருசியாகத் திங்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிறவைகளைப் பார்பதிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும். வாழ்க்கைத் தொல்லைகளிடையே சிறிது உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தவறா என்று கேட்கலாம். நான் சொல்கிறேன் பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்பது தெரியும்.

21 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 23



சத்தியத்தில் ஒருவன் நிலைத்து நின்றுவிட்டால் அவனுக்கு அதனால் தன்னையும் அறியாமலே ஒரு பிரயோஜனம் உண்டு. ஒருவன் சத்தியமே பேசிப்பழகிவிட்டால் முடிவில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும்.  இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான்.

ஆனால், அறியாமையாவோ, தவறுதலாகவோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லிவிட்டாலும், அந்த தப்பே நடை முறையில் சத்தியமாக நடந்துவிடும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 22


சத்தியத்தின் லக்ஷணம், மனமும், வாக்கும் ஓன்றுபட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது வாக்கு. வாக்கு சாந்தமாக இருப்பது தனக்கு சித்த சுத்தியையும், பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

14 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 21


சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஓழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய
ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களைத் தந்தார்கள் என்று விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும்.

02 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 20



லட்சியம் லெளகிகமாக மட்டும் இருந்தால் அவ்வப்போது சமூக வாழ்வுக்கான விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். 

ஆனால், ஆத்ம க்ஷேமத்தையே லட்சியமாக வைத்து அதற்கு அனுசாணையாக லெளகிக வாழ்க்கைக்கு விதிகள் செய்து தருகிறபோது, இவ்விதிகளை மாற்ற முடியாது.

01 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 19




எனக்கு கனகாபிஷேகத்துக்கும், பீடாரோஹணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி அதற்காகக் கமிட்டி, திட்டம், வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது.

எட்டு வயதிலிருந்து ஆரம்பித்துப் பிறகு, பத்து வருஷங்களுக்கு இளம் பிள்ளைகளுக்கு தினம் ஒரு மணிநேரம் வேத மந்திரங்களிலும், பிரயோகங்களிலும் பேட்டைக்குப் பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறென்.

இதுதான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம்,  உற்சவம் எல்லாம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 18



அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே  என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற சேவகனாகப் [மஸால்ஜி]

பிராமணன் இருக்க வேண்டும்.  இப்போதுள்ள எல்லாப் பிரஜைகளுக்கும், எதிர்கால் வாரிசுகளுக்கும் இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது. மற்றவர்களை அதட்டிக் கொண்டு தனக்கு உயர்வு கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்.

சமூகத்தில் வேத விளக்கைப் படித்துக் கொண்டு வழி காட்டுவதற்குத்தான் அது இருக்கிறது. இதை எடுத்துக் கூறவே நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறென்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 17



மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் உலகிற்கு வந்திருக்கின்றன என்பது அடிப்படைக் கொள்கை. அவர்கள் மந்திரங்களைக் கண்டவர்கள்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 16




பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்பட்டதே அல்ல. அது உலக ஷேமத்துக்காக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை, அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில், அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக்கூடாது என்பதே அடிப்படை தர்மம். 

அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான்.
Related Posts with Thumbnails